Operating System Introduction in Tamil | பணிச்செயல் முறைமையின் அறிமுகம்.

உள்ளடக்கம்

  1. பணிசெயல் முறைமையின் அறிமுகம்.
  2. கணினியின் ஆரம்பத் தொழிற்பாடு.
  3. முறைமை மென்பொருள்.
    1. பணிச்செயல் முறைமை.
    2. பயன்பாட்டு மென்பொருள்.
    3. மொழிபெயர்ப்பிகள்.
      1. ஒருங்கு சேர்ப்பி.
      2. வரிமொழி மாற்றி.
      3. தொகுப்பி.
  4. பயனருக்கும் கணினிக்குமிடையிலான தொடர்பு.

பணிசெயல் முறைமையின் அறிமுகம்

கணினி வன்பொருள் (Hardware), நிலைபொருள் (Firmware), மென்பொருள் (Software) ஆகிய பல்வேறுபட்ட கூறுகளைக் கொண்டதாகும். திட்டமான வடிவத்தைக் கொண்டதும் தொட்டுணரக் கூடியதுமான கணினிப் பாகங்கள் வன்பொருட்கள் (Hardware) எனப்படும். உதாரணமாக : சாவிப்பலகை (Keyborad), சுட்டி (Mousc), தெரிவிப்பி (Monitor), வன்வட்டு (Hard disk), அச்சுப்பொறி (Printer) ஆகியன வன்பொருள்களாகும்.

வாசிப்பு மட்டும் நினைவகத்திலுள்ள (ROM) நிறுவி, கணினியின் அடிப்படைத் தொழிற்பாடுகளுக்கான (BOOT) அறிவுறுத்தல்கள் நிலைபொருள்கள் (Firm ware) எனப்படும். பயநரால் முதலில் திரையில் காணத்தக்க எழுத்துருவை அல்லது படவுருவை வருவிளைவாகத் தருவன நிலைபொருள்களாகும்.

பணிச்செயல் முறைமை அல்லது இயக்க முறைமை என்பது ஒரு வகை மென்பொருளாகும், இது பயனருக்கும் வன்பொருளுக்கும் இடையில் ஒரு இடைமுகமாக (Interface) செயல்படுகிறது. பணிச்செயல் முறைமையானது கணினி மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்களின் முக்கியமான செயல்பாடுகளைக் கையாள்வதும் கட்டுப்படுத்துவதும் இதன் பொறுப்பாகும்.

ஒரு பணிச்செயல் முறைமையினால் பல்வேறு விதமான பணிகள் கையாளப்படுகின்றன அவையாவன

  1. கோப்பு முகாமை (File Management)
  2. பணி முகாமை (Task Management)
  3. குப்பை முகாமை (Garbage Management)
  4. நினைவக முகாமை (Memory Management)
  5. செயல்முறை முகாமை (Process Management)
  6. வட்டு முகாமை (Disk Management)
  7. I/O முகாமை (I/O Management)
  8. சாதன முகாமை (Device Management)

கணினியின் ஆரம்பத் தொழிற்பாட்டை மேற்கொள்ளும் முறை.

1. பயநரினால் கணினியில் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டதும் மைய முறை வழியாக்க அலகின் மூலம் அடிப்படை உள்ளீடு, வருவிளைவு முறைமை (Basic Input Output System - BIOS) தொழிற்படுத்தப்படும்.

2. முதலில் Power - On Self Test (POST) செய்நிரல் ஓட்டம் நடைபெறும். இதன் ஆரம்பப் படிமுறையாக CMOS (Complementary Metal Oxide Semiconductor) நினைவகத்தின் மூலமாக அனைத்து வன்பொருள்களும் சேர்க்கப்பட்டு அவை அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா என உறுதிப்படுத்தப்படும்.

3. அடுத்து கணினி உற்பத்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய Bootstrap Loader எனும் நிலைபொருளிற்கமைய POST செய்நிர லினால் இனங்காணப்பட்ட boot sequence / order இனால் தொடக்கச் செலுத்தியில் (boot drive) Master Boot Record (MBR) வாசிக்கப்படும்.

4. இறுதியாக Boot drive இலுள்ள பணிசெயல் முறைமை தற்போக்குப் பெறுவழி நினைவகத்தில் (RAM) பிரவேசிக்கும்.

5. அதற்கு அடுத்ததாக கணினியின் முழுமையான கட்டுப்பாட்டை, பணிசெயல் முறைமை பெற்று, பயநர் இடைமுகத்தை (User Imerfsce) அளிக்கும்.

இந்த முழுமையான செயன்முறை தொடக்குதல் (Bosting) எனஅழைக்கப்படும். பணிசெயல் முறைமை, கணினியின் தற்போக்குப் பெறுவழி நினைவகத்தில் (பிரதான நினைவகத்தில்) பிரவேசித்தல் booting என்பதன் பொருளாகும்.

கணினியின் மூலமாக குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளத் தேவையான அறிவுறுத்தல்களின் திரட்டே மென்பொருள் (Software) எனப்படும். மென்பொருள்கள் பல வகைப்படும். அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.



முறைமை மென்பொருள்

முறைமை மென்பொருளானது பிரதானமாக மூன்று வகைப்படுகின்றது அவையாவன பின்வருமாறு

1. பணிச்செயல் முறைமை.

பணிச்செயல் முறைமை அல்லது இயக்க முறைமை என்பது ஒரு முறைமை மென்பொருளாகும். இது பயனர் மற்றும் கணினி வன்பொருள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை ஏற்படுத்துவதோடு ஒரு மெய்நிகர் இயந்திரமாகவும் (Virtual Machine) காணப்படுகின்றது. அதாவது வன்பொருள் தகவல்களை மறைத்து பிரயோகங்களுக்கும் பயனருக்குமான இடைமுகத்தினை வழங்குகின்றது.

பணிச்செயல் முறைமையானது கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள், வன்பொருள்கள் ஆகியவற்றை முகாமை செய்து ஏனைய மென்பொருள்களுக்கான சேவைகளை வழங்குவதோடு பயநர் கணினியைப் பயன்படுத்துவதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கின்றது.

இவ் இயக்க முறைமையானது வளப்பயன்பாடு, வளங்களை அனுமதித்தல், தவிர்த்தல் மற்றும் பிரயோக மென்பொருட்களை முன்னெடுத்துச் செல்லல் போன்றவற்றை கண்காணிக்கின்றது. முறைமை மென்பொருள், பிரயோக மென்பொருள் ஆகியன வன்பொருளுடன் இணைந்து தொழிற்படும் விதத்தினை பின்வருமாறு காட்டலாம்.


பணிச்செயல் முறைமைக்கான உதாரணங்கள்

  1. MS Windows
  2. Ubuntu OS
  3. Mac OS
  4. Linux OS
  5. Unix OS
  6. Android OS
  7. Kali OS
  8. Cent OS

2. பயன்பாட்டு மென்பொருள்.

கணினியில் நிறுவப்பட்டுள்ள ஏனைய மென்பொருள்களைப் பகுப்பாய்வு செய்தல், இயைபாக்கல், குறித்த செயற்பாடுகளுக்கு மிகப் பொருத்தமான மென்பொருள்களைத் தெரிவுசெய்தல், கணினியைப் பராமரித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கென ஆக்கப்பட்டவையே இந்த மென்பொருள்களாகும். அவ்வாறான சில மென்பொருள்கள் வருமாறு:

1. நச்சுநிரல் எதிர் மென்பொருள்கள் (Antivirus Software) - நச்சுநிரல் தொற்றுகளிலிருந்து கணினியைப் பாதுகாத்தல்.

2. வட்டு வடிவமைத்தல் (Disk Formating) - கோப்புகள், கோப்பு உறைகள் ஆகியவற்றை சேமிக்க பொருத்தமான முறையில் வட்டினைத் (Disk) தயார் செய்தல்.

3. கோப்பு மேலாண்மை அமைப்பு (File Management System) - இது கணினியில் கோப்புகளை ஒழுங்கமைக்கவும், சேமிக்கவும் மற்றும் எளிதாக மீட்டெடுப்பதற்காக அந்தக் கோப்புகளை அட்டவணைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

4. வட்டு மேலாண்மை கருவிகள் (Disk Management Tools) - இது வன்வட்டில் எவ்வளவு தரவு உள்ளது மற்றும் எந்த கோப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதைக் காண்பிக்கும். அத்துடன் வன்வட்டு எவ்வளவு துண்டு துண்டாக உடைந்துள்ளது மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட வெளிப்புற இயக்ககங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதையும் இது காண்பிக்கும்.

5. வட்டு துண்டாக்கள் (Disk Defregmentation) - வட்டில் வெறுமையான சிறிய பிரதேசங்களை இணைத்து பெரிய பிரதேசத்தை உருவாக்கி வட்டினை ஒழுங்கமைத்தல்.

3. மொழிபெயர்ப்பிகள்.

கணினிச் செய்நிரல்கள் (மென்பொருள்கள்), அறிவுறுத்தல்களின் தொகுப்பினால் ஆக்கப்பட்டவையாகும். இவை மனித மொழிகளுக்கு நெருக்கமான உயர்மட்ட மொழிகளைப் (High Level Language) பயன்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. இவற்றைக் கணினியால் விளங்கிக் கொள்ளக்கூடிய மொழியான (Machine Language) 1,0 ஆகியவற்றில் மொழிபெயர்ப்பதே மொழிபெயர்ப்பிகளின் தொழிலாகும். ஒருங்குசேர்ப்பி (Assembler), தொகுப்பி (Compiler), பொருள்கோடலி (வரிமொழி மாற்றி) (Interpreter) ஆகியன இதற்கான உதாரணங்களாகும்.

மொழிபெயர்ப்பிகளும் அவற்றின் வகைகளும்

இயந்திர மொழி தவிர்ந்த வேறு எந்த மொழியிலும் எழுதப்பட்ட செய்நிரல்களை இயக்க முன்னர் இயந்திர மொழி அறிவுறுத்தல்களாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கு பின்வரும் மொழிபெயர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. ஒருங்கு சேர்ப்பி (Assembler)

ஒருங்கு சேர்ப்பு மொழியில் (Assembly Language) எழுதப்பட்ட ஒரு செய்நிரலை ஒருங்கு சேர்ப்பி (Assembler) எனப்படும் மொழிபெயர்ப்புச் செய்நிரலின் மூலம் இயந்திர மொழி (Machine Language) அறிவுறுத்தல்களாக மாற்ற வேண்டும்.



உயர்மட்ட கணினி மொழியைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு செய்நிரலை இயந்திர மொழி அறிவுறுத்தல்களாக மாற்றுவதற்கு இரு மொழிபெயர்ப்பு செய்நிறல்கள் பயன்படுத்தப்படுகிறது.

  1. வரிமொழி மாற்றி (Interpreter)
  2. தொகுப்பி (Compiler)

1. வரிமொழி மாற்றி (Interpreter)

வரிமொழி மாற்றியானது மூலச் செய்நிரலை (Source Code) ஒவ்வொரு வரியாக பொருள் நோக்கு (Object Code) செய்நிரலுக்கு மாற்றும் இதனால் இச்செய்முறை செய்நிரல் செயற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீள் செயற்படுகின்றது இதனால் செயற்படும் நேரம் அதிகமாக காணப்படுகின்றது. உதாரணம் BASIC, FORTRAN, PYTHON



குறிப்பு : செய்நிரல் இயக்கப்படும் ஒவ்வொரு தடவையும் மொழிபெயர்ப்பு நடைபெறும்.

2. தொகுப்பி (Compiler)

தொகுப்பிகள் மூலச் செய்நிரலை (Source Code) ஒரே முறையில் பொருள் நோக்கு (Object Code) செய்நிரலுக்கு மாற்றும். இச்செயன் முறையின் பின் ஒரு நிரந்தர துவித குறிமுறையாக (Binary File) பொருள் நோக்கு செய்நிரல் உருவாக்கப்படுகின்றது. செய்நிரல் இயக்கப்படும் ஒவ்வொரு முறையும் பொருள் நோக்கு செய்நிரல் இயக்கப்படுவதினால் இதன் செயல்படு நேரம் குறைவானதாகும். உதாரணம் PASCAL, C, JAVA.



செய்நிரலை ஒரு தடவை இயந்திர மொழியாக மாற்றிய பின்னர் தேவையான எத்தனை தடவையும் செய்நிரலை இயக்கலாம். மூலச் செய்நிரல் (Source Code) மாற்றப்பட்டால் மாத்திரம் மீண்டும் மொழிபெயர்ப்பு தேவைப்படும்.

பயனருக்கும் கணினிக்குமிடையிலான தொடர்பு

பயநர் மற்றும் கணினி வன்பொருள்கள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை ஏற்படுத்துவதே பணிசெயல் மென்பொருளாகும். இதன்மூலம் பல்வேறு பிரயோக மென்பொருள்களைக் கணினியில் நிறுவுதல், தொழிற்படச் செய்யத் தேவையான கட்டளைகளை வழங்குதல், உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Devices), வருவிளைவுச் சாதனங்கள் (Output Devices), கணினி நினைவகம் (Computer Memory), முறைவழி (Process), கோப்புக்கள் (Files), காப்பு (Security) மற்றும் வலையமைப்பு (Network) ஆகியவற்றை முகாமைசெய்தல், கணினியில் நிறுவப்பட் டுள்ள ஏனைய மென்பொருள்களை இயக்குதல் போன்ற பணிகள் செய்யப்படும். இதிலிருந்து, கணினியின் முழுமையான இயக்கத்தைப் பணிசெயல் முறைமையே இயைபுபடுத்துகின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments