Information System in Tamil | தகவல் முறைமை.

உள்ளடக்கம்

  1. கைமுறைத் தகவல் முறைமை.
  2. கைமுறைத் தகவல் முறைமையின் நன்மை தீமைகள்.
  3. இலத்திரனியல் தகவல் முறைமை.
  4. இலத்திரனியல் தகவல் முறைமையின் நன்மை தீமைகள்.
  5. இணையம் (Internet).
  6. உலகளாவிய வலை (WWW).
  7. செல்லிடத் தொடர்பாடலும் கணிமையும்.
  8. மேகக் கணிமை (Cloud Computing).
  9. முகில் கணினியின் பிரதான சேவைகள்.
  10. முகில் கணினியின் நன்மை தீமைகள்.

கைமுறைத் தகவல் முறைமை

கைமுறைத் தகவல் முறைமை என்பது ஒரு புத்தகப் பராமரிப்பு அமைப்பாகும். இங்கு கணினி அமைப்பைப் பயன்படுத்தாமல் பதிவுகள், பரிவர்தனைகள் என்பன கைகளினால் எழுதப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. இது கணினி முறைமையை விட அதிக பிழைகளைக் கொண்டிருப்பதோடு மிகவும் மெதுவாகவும் தொழிற்படக்கூடியது. எனினும் குறைந்த அளவிலான பதிவுகள், பரிவர்தனைகளைக் கொண்ட சிறு நிறுவனங்களில் கைமுறைத் தகவல் முறைமை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்: Diary, Address Book, Filing Cabinet.



கைமுறைத் தகவல் முறைமையின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்.

அனுகூலங்கள்
  1. Data accuracy.
  2. Inputting human sensible data.
  3. Job creation
  4. Less expensive to set up.
பிரதிகூலங்கள்
  1. Avoidable errors.
  2. Low speed of data entry.
  3. High cost of training.
  4. System vulnerability.

இலத்திரனியல் தகவல் முறைமை

ஒரு செயலை அல்லது பல செயல்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய வன்பொருள்களின் கூறுகள் இணைக்கப்பட்டு மென்பொருள் கட்டளைகளைக் கொண்டு இயங்கும் ஒரு இலத்திரனியல் சாதனத்தைக் குறிக்கின்றது. இங்கு தரவுகளை உள்ளிடல், முறைவழியாக்கள், தகவல்களினை வெளியிடல் போன்ற செயற்பாடுகள் முறைமையினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.



இலத்திரனியல் தகவல் முறைமையின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்.

அனுகூலங்கள்
  1. Reduce the time spent on manual systems.
  2. Less errors and increased accuracy.
  3. Automated invoices.
  4. Fast record keeping.
  5. Data storage and searching options.
  6. Needed less amount of employees.
  7. Data security.
பிரதிகூலங்கள்
  1. Highly expensive for the system.
  2. Training needed.
  3. Data corrupted.
  4. Ethical issues (piracy, hacking).

இணையம் (Internet)

இணையம் என்பது ஏதாவது ஒரு வலையமைப்பின் பயனர்கள் தமக்கு அனுமதி இருப்பின் வேறொரு வலையமைப்பிலிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வலையமைப்புகளின் வலையமைப்பு இணையம் எனப்படும்.

இணையத்திற்கு தனியுரிமையாளர்கள் கிடையாது. தற்போது இணையச் சங்கம் (The internet society) எனும் இலாப நோக்கமற்ற அமைப்பொன்றின் மூலமாக இணையப் பயன்பாடு தொடர்பான நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் இணையத் தொழிற்பாட்டிற்கான செம்மை நடப்பு வழக்குகள் (Protocols) ஆகியன தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் ARPANET (Advanced Research Project Agency Network) எனும் வலையமைப்பினூடாக இணையத்திற்கான அடித்தளத்தை ஆரம்பித்தது. இருப்பினும் உலகளாவிய வலை (WWW - World Wide Web) 1990 களின் ஆரம்ப காலத்தில் அபிவிருத்தி அடையும் வரை பொதுமக்கள் இணையத்தை அதிக அளவில் பயன்படுத்தவில்லை.

1957 இல் ஐக்கிய அமெரிக்க அரசாங்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒரு பகுதியினூடாக Advanced Research Project Agency (ARPA) எனும் செயற்றிட்டத்தை உருவாக்கி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றில் இராணுவப் பிரயோகங்கள் கொண்டுவரப்படுவதற்கு அமெரிக்க தலைமைத்துவத்திற்கு உறுதியளிக்கப்பட்டது. 1969 இல் (ARPA) இணையத்தின் முன்னோடியான ARPANET ஐ நிறுவியது.

ARPANET எனும் வலையமைப்பு முதலில் பல்கலைக்கழகங்களிலுள்ள பிரதான கணினிகளை இணையத்துடன் இணைத்துக் கொண்டதுடன் ஏனைய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பின்னர் இணைத்துக் கொண்டது.

தற்காலங்களில் இணையத்தினை பயன்படுத்தி பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன அவற்றுள் சில, உலகளாவிய வலை (WWW), கோப்புப் பரிமாற்றம் (FTP), மின்னஞ்சல் (E-Mail), காணொளி மாநாடு (Video Conferencing), இணைய தொலைபேசி (IPTP), மற்றும் இணைய தொலைக்காட்சி (IPTV), என்பவை முக்கியமானவைகளாகும்.

உலகளாவிய வலை (World Wide Web)

உலகளாவிய வலை 1991 இல் அறிமுகமானது Tim Berners Lee என்பவர் உலகளாவிய வலையை விருத்தி செய்ததுடன் இவரே வலைத் தொழில்நுட்ப நியமங்களை மேற்பார்வை செய்யும் தொழிற்துறை பிரதிநிதிகளின் ஒரு குழுவான உலகளாவிய வலைக் கூட்டமைப்பையும் (W3C - world wide web consortium) நிர்வகிக்கின்றார்.

HTTP எனப்படுவது உலகளாவிய வலையின் கோப்புகளை (வாசகம் (Text), வரைவியல் (Graphics), படிமம் (Pictures), ஒலி ( Sound), காணொளி (Video), மற்றும் பல்லூடக கோப்புகள் (Multimedia Files)) போன்றவற்றை பரிமாறுவதற்கான ஒரு தொகுதி நியதியாகும்.

மீவாசகம் (Hypertext) எனப்படுவது வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்களை உருவாக்கக்கூடிய ஆவணமாகவும் மீயிணைப்பின் ஊடாக மீவாசக ஆவணங்களை இணைக்கக் கூடியதாகவும் உள்ளது.



வலையில் உள்ள கோப்புகளைப் பார்வையிடுவதற்கு வலை மேலோடி (web browser) மென்பொருலொன்று அவசியமாகும் (உதாரணம் Google Chrome, Opera mini, Internet Explorer, Mozilla Firefox, Safari) இம் மென்பொருள்கள் வலைப்பக்கங்களின் பல்வேறு ஆவணங்களைப் பார்வையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

வலைத்தளம் எனப்படுவது வலைப்பக்கம் ஒன்றை அல்லது பலவற்றை கொண்டிருக்கலாம் வலைத்தளத்தின் முதற் பக்கம் முகப்பு பக்கம் (Home Page) எனப்படும். ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் தனித்துவமான முகவரியொன்று உள்ளது இது சீர்மை வள இடப்படுத்தி (URL - Uniform Resource Locator) எனப்படும்.

செல்லிடத் தொடர்பாடலும் செல்லிடக்கணிமையும் (Mobile Communication and Mobile Computing)

தொடர்பாடலானது வடங்கள் (wire) அல்லது வேறெவ்வித மின்கடத்திகளினதும் உதவியின்றி தொலைவிற்குத் தகவல்களைப் பரிமாற்றுவதில் செல்லிடத் தொடர்பாடலானது பங்களிப்புச் செய்கின்றது.

ஆரம்ப கட்டத்தில் ஒரு ஜோடி பயனர்களுக்கிடையில் தனி வழிச்சோடி செல்லிடத் தொடர்பாடல் செய்யக் கூடியவாறு வரையறுக்கப்பட்டிருந்தது. பிற்பட்ட காலங்களில் பல பயனர்களுக்கு இடமளிக்கும் வகையில் நேர பகிர்வு பல்லணுகள் (TDMA - Time Division Multiple Access), குறிப்பிரிவு பல்லணுகள் (CDMA - Code Division Multiple Access), அதிர்வெண் பிரிவு பல்லணுகள் (FDMA - Frequency Division Multiple Access) மற்றும் இவற்றின் கலப்பு முறை என்பனவும் பயன்படுத்தப்படுகின்றது.

செல்லிடக்கணிமை என்பது நிலையான பௌதீக தொடர்பின் மூலம் இணைக்கப்படாத கணினியின் ஊடாக அல்லது வேறு வடமில்லா (Wireless) இணைப்பு எளிமைப்படுத்தப்பட்ட சாதனமூடாகத் தரவு, குரல், மற்றும் காணொளி என்பவற்றை பரிமாற்றம் செய்வதற்கு வசதியளிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.

மேகக் கணிமை (Cloud Computing)

மேகம் (Cloud) எனும் பதம் ஒரு வலையமைப்பை (Network) அல்லது இணையத்தை (Internet) குறிக்கின்றது. மேகம், தொலைவிடம் (Remote area) ஒன்றிலிருந்து வலையமைப்பின் ஊடாக சேவை வழங்குகின்றது. மின்னஞ்சல் (E-Mail), வலைமாநாடு (Video Conferencing), மற்றும் நுகர்வோர் உறவு முறை முகாமைத்துவம் (CRM - Customer Relationship Management) போன்ற பிரயோகங்கள் மேகத்தில் செயல்படுகின்றன.



மேகக் கணிமை (Cloud Computing) என்பது குறித்த பிரயோகங்களை நேரலையில் (Online) அணுகல், கையாளுதல் மற்றும் வடிவமைத்தல் என்பவற்றை கொண்டுள்ளது. நேரலை தரவு சேமிப்பு, உட்கட்டமைப்பு மற்றும் பிரயோகங்கள் என்பவற்றை மேகக் கணிமையானது இணையம் மூலம் வழங்குகின்றது. இதன் போது எந்தக் கணத்திலும் எந்த ஒரு இடத்திலிருந்தும் தகவல்களைப் பெறவும் தகவல்களைச் சேமிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முகில் கணினியின் பிரதான சேவைகள்.

உட்கட்டமைப்பு ஒரு சேவையாக (Iaas - infrastructure as a service)

அடிப்படை வளங்களான பௌதீக இயந்திரங்கள், மெய்நிகர் இயந்திரங்கள், மெய்நிகர் சேமிப்பகங்கள் போன்றவாரான சேவைகளை வழங்குகின்றது. உதாரணம் : சேவையகக் கணினி, தீகாப்புச் சுவர் இல்லாத போது முகில் கணினிச் சேவை மூலமாக சேவையகக் கணினி, இடவசதி (Server Space), தீக்காப்பு சுவர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தலாம்.

அபிவிருத்திச் சூழல் ஒரு சேவையாக (Pass - platform as a service)

இந்தச் சேவை மென்பொருள் அபிவிருத்தி மற்றும் மென்பொருள் இயக்கம் ஆகியவற்றுக்கான சூழலை வழங்கும். பணிசெயல் முறைமை, கணினி மொழிச் சூழல், தரவுத்தளம், வலைச் சேவையகம் ஆகிய வசதிகளை இதன் மூலம் பயனர்களுக்கு வழங்குகின்றன. உதாரணம் : பணிச் செயல் முறைமை, தொகுப்பி போன்றன உங்கள் கணினியில் நிறுவப்பட்டிராது விடினும் முகில் கணினிச் சேவை மூலமாக மென்பொருள்களை உற்பத்தி செய்யலாம்.

மென்பொருள் ஒரு சேவையாக (Saas - software as a service)

சேவை பயனர்களுக்குத் தேவையான இயக்குமென்பொருளை நிறுவாது முகில் அல்லது இணையத்தில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை பயன்படுத்துவதற்கான வசதிகளை இது வழங்குகின்றன. இதன் போது விசேடமாக மென்பொருள் அபிவிருத்தி, மென்பொருள் தயாரிப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வன்பொருள்கள், அபிவிருத்தி மென்பொருள்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போதும் முகாமை செய்யும் போதும் ஏற்படும் செலவுகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றைக் குறைக்கலாம்.

முகில் கணினியைப் பயன்படுத்துவதன் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்.

அனுகூலங்கள்
  1. மென்பொருளுக்கான செலவு குறைவடைதல்.
  2. செயலாற்றுவதை மேம்படுத்தல்.
  3. பராமரிப்பு நடவடிக்கைகள் குறைவடைதல்.
  4. மென்பொருள்களை உடனடியாக இட்றைப்படுத்த முடிதல்.
பிரதிகூலங்கள்
  1. இணைய வசதிகள் தேவைப்படல்.
  2. குறை விரைவு இணைப்பின் போது தொழிற்பாடு குறைவடைதல்.

Post a Comment

0 Comments