History of Computer in Tamil | கணினியின் வரலாறு

உள்ளடக்கம்

  1. கணினி என்றால் என்ன?
  2. கணினியின் வரலாறு.
    1. தூய இயந்திர யுகம் (1440 க்கு முன்)
    2. இயந்திர யுகம் (1450 - 1840)
    3. மின் இயந்திர யுகம் (1840 - 1940)
    4. இலத்திரனியல் யுகம் (1940 க்கு பின்)
  3. கணினியின் தலைமுறைகள்.
    1. 1ம் தலைமுறை (1940 - 1956)
    2. 2ம் தலைமுறை (1956 - 1963)
    3. 3ம் தலைமுறை (1964 - 1975)
    4. 4ம் தலைமுறை (1975 - 1989)
    5. 5ம் தலைமுறை (1989 - இன்று வரை)
  4. கணினிகளை வகைப்படுத்தல்.
    1. தொழினுட்பத்தின் அடிப்படையில்
    2. நோக்கத்தின் அடிப்படையில்
    3. பருமன் அடிப்படையில்

கணினி என்றால் என்ன?

கணினி என்பது பயனரினால் உள்ளிடப்படும் அல்லது தொகுதியினால் சேர்க்கப்படும் தரவுகளை பயனரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப முறைவழிப்படுத்தி தகவல்களை வெளியிடும் ஒரு மின்னணு இயந்திரமாகும்.

கணினியின் வரலாறு.

தற்கால கணினிகள் வரை, இன்று கணினி வளர்ச்சியடைந்ததற்கான பிரதான காரணம் ஆரம்ப காலங்களிலிருந்து மக்கள் கணித்தல் ரீதியான செய்கைகளில் ஈடுபட்டதேயாகும். இதற்காக ஆரம்ப காலங்களில் மக்கள் குச்சிகள், கற்கள் மற்றும் எலும்புகளை எண்ணும் கருவிகளாக பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மனிதனுடைய அறிவுத்திறன் மேம்பட்டதன் விளைவாக அதிகளவான கணித்தல் சாதனங்கள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் கணித்தல் ரீதியான செயன்முறையை மேற்கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது.



எனினும் தற்கால கணினிகளின் பரிணாம வளர்ச்சியானது பல்வேறு காலகட்டங்களை தாண்டி அமையப் பெற்றுள்ளது. அவற்றினை எமக்கு பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.

கணக்கீட்டுச் சாதனம் - தூய இயந்திர யுகம் (1450 க்கு முன்னர்), இயந்திர யுகம் (1450 - 1840), மின்னியல் இயந்திர யுகம் (1840 1940) மற்றும் இலத்திரனியல் யுகம் (1940 களின் பின்னர்). ஆரம்ப காலங்களில் தரவுகளையும் தகவல்களையும் எழுதிப் பாதுகாப்பாகப் பேணுவதற்கு Tally sticks எனப்படுகின்ற குச்சிகள் பயன்படுத்தப்பட்டது. இதில் இலக்கங்கள் (Numbers), அளவுகள் (Quantity), மற்றும் செய்திகள் (Message) என்பன எழுதிப் பாதுகாக்கப்பட்டன.

தூய இயந்திர யுகம் (1450 க்கு முன்னர்).

எண்சட்டம் ( Abacus)

ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்ட முதலாவது கணித்தல் உபகரணமாக எண்சட்டமானது காணப்படுகின்றது. இது கி.மு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியா மக்களினால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. எனினும் கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறன. மேலும் இது சாதாரண கணித்தல் செயல்களைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டன.

இயந்திர யுகம் (1450 - 1840)

Napier's Bones (நேப்பியரின் சட்டகங்கள்)

1614 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த John Napier என்பவரால் நேப்பியரின் சட்டகங்கள் (Napier's Bones) கண்டுபிடிக்கப்பட்டது. இது மடக்கை கோட்பாடுகளை (Logarithms) அடிப்படையாகக் கொண்டு பெருக்கல் (Multiply), பிரித்தல் (divide), Square Root மற்றும் Cube Root என்பவற்றினைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது.

Slide Rule

1622 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த William ought red என்பவரால் Slide Rule எனும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது John Napier இன் Logarithms எண்ணக்கருவினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது Multiplication, Division, Roots, Logarithms and Trigonometry என்பவற்றினைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது கூட்டல், கழித்தல் செய்கைகளைச் செய்வதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை.

Pascaline (பஸ்கலின்)

1642 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளரான Blaise Pascal என்பவரால் கூட்டற்பொறி (Adding Machine) கண்டுபிடிக்கப்பட்டது. இது Pascaline எனப் பெயரிடப்பட்டது. இது சாதாரணமான கூட்டல் மற்றும் கழித்தல் செய்கைகளைச் செய்ததுடன் விலை உயர்ந்ததாகவும் காணப்பட்டது.

Stepped Reckoner

1674 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரான Gottfried Wilhelm von Leibnitz பஸ்கலின் உபகரணத்தை மேம்படுத்தினார். இதன் விளைவாக கூட்டல், கழித்தல், வகுத்தல் மற்றும் பெருக்கல் ஆகியவற்றை மேலும் எளிதாக செய்யக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

Jacquard Loom

1804 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Joseph-Marie Jacquard என்பவரால் Jacquard Loom எனும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது துளை அட்டை (Punch Card) தொழிநுட்பத்தைக் அடிப்படையாகக் கொண்டு இயங்கியது.

Arithmometer

1820 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Thomas de Colmar என்பவரால் Arithmometer எனும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது வணிக ரீதியாக பிரபல்யம் அடைந்து காணப்பட்டதோடு அடிப்படை கணித செயல்களைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது.

Difference Engine (வேறுபாட்டு இயந்திரம்)

1820 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரான Charles Babbage என்பவரால் Difference Engine எனும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகின் முதலாவது இயந்திரவியல் (Mechanical) கணினியாகும்.

Analytical Engine (பகுப்பாய்வு இயந்திரம்)

1834 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரான Charles Babbage என்பவரால் Analytical Engine எனும் மற்றுமொரு இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் கணினிச் செய்நிரலாளர்

1840 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Augusta Ada Byron என்பவரால் Charles Babbage க்கு துவித எண் முறைமை (Binary System) தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் இவர் Analytical Engine இயந்திரத்திற்கான முதலாவது செய்நிரலை எழுதியதோடு உலகின் முதலாவது கணினிச் செய்நிரலாளர் எனவும் அழைக்கப்படுகிறார்.

Printing Calculator

1843 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த Per Georg Scheutz என்பவரால் Printing Calculator கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் முதலாவது Printing Calculator ஆக காணப்படுவதோடு Charles Babbage இன் difference engine இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

மின் இயந்திர யுகம் (1840 - 1940).

Tabulating Machine

1890 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த Herman Hollerith என்பவரால் துளை அட்டைகளைக் கொண்டு இயங்கக்கூடிய Tabulating Machine கண்டுபிடிக்கப்பட்டது.

MARK 1

1943 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த Howard H.Aiken என்பவரால் Mark 1 என்னும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் முதலாவது மின் இயந்திரக் (Electro-mechanical) கணினியாகக் கருதப்படுகின்றது.

இலத்திரனியல் யுகம் (1940 களின் பின்னர்).

Z1

1936 - 1938 களில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Konrad Zuse என்பவரால் Z1 என்னும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் முதலாவது செய்நிரலில் இயங்கக்கூடிய கணினியாக காணப்பட்டதோடு தரவுகளை உள்ளிடுவதற்கும் வெளியிடுவதற்கும் Punch Tape தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

Turing Machine

1936 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Alan Turing என்பவரால் Turing Machine கண்டுபிடிக்கப்பட்டது.

ABC (Atanasoff-Berry Computer)

1937 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த John Atanasoff என்பவரால் ABC என்னும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் முதலாவது இலத்திரனியல் இலக்கமுறைக் கணினியாகும்.

ENIAC (Electronic Numerical Integrator and Computer)

1946 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த John Presper Eckert மற்றும் John W.Mauchly என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் முதலாவது இலத்திரனியல் பொதுநோக்குக் கணினியாகக் கருதப்படுகின்றது.

Transistor

1947 ஆம் ஆண்டு William Shockley, John Bardeen, Walter Brattain என்பவர்களால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே கணினிகளின் துரித வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது.

EDSAC (Electronic Delay Storage Automatic Calculator)

1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Maurice Wilkes என்பவரால் முழு அளவில் சேமித்து வைக்கக்கூடிய செய்நிரல் கொண்ட முதலாவது கணினி கண்டுபிடிக்கப்பட்டது.

EDVAC (Electronic Discrete Variable Automatic Computer)

1948 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த John Presper Eckert மற்றும் John W.Mauchly என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது செய்நிரல்களை சேமிக்க கூடிய முதலாவது இலக்கமுறைக் கணினியாக கருதப்படுகின்றது.

UNIVAC 1 (Universal Automatic Computer 1)

1951 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த John Presper Eckert மற்றும் John W.Mauchly என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் முதலாவது பொது நோக்கு இலத்திரனியல் இலக்கமுறை கணினியாகும்.

IC (Integrated Circuit)

1958 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த Jack Kilby என்பவரால் IC கண்டுபிடிக்கப்பட்டது.

Microprocessor

1971 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த Ted Hoff என்பவரால் முதலாவது நுண்முறை வழியாக்கியான Intel 4004 எனும் Microprocessor உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கணினியின் தலைமுறைகள்.

கணினியின் தலைமுறையானது பிரதானமாக 5 பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது அவையாவன.

  1. முதலாம் தலைமுறை (1940 - 1956)
  2. இரண்டாம் தலைமுறை (1956 - 1963)
  3. மூன்றாம் தலைமுறை (1964 - 1975)
  4. நான்காம் தலைமுறை (1975 - 1989)
  5. ஐந்தாம் தலைமுறை (1989 - இன்று வரை)

முதலாம் தலைமுறை (1st Generation)

முதலாம் தலைமுறைக் கணினிகளில் வெற்றிட குழாய் தொழினுட்பம் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டது. இங்கு தரவு உள்ளீடு (Input), தேக்கிவைத்தல் (Storage) மற்றும் வெளியீடு (Output) ஆகியவற்றிற்கு துளை அட்டைகள் (Punch card) பயன்படுத்தப்பட்டன. இத் தலைமுறைக் கணினிகளில் பொறி மொழி (Machine Language) மற்றும்  ஒருங்கு சேர்ப்பு மொழி (Assembly Language) என்பன பயன்படுத்தப்பட்டது. ஒருங்கு சேர்ப்பு மொழி தேக்கிவைத்த செய்நிரல் எண்ணக்கரு (Stored Program Concept) என்பனவும் பயன்படுத்தப்பட்டன. இத் தலைமுறைக் கணினிகளானது பின்வரும் இயல்புகளைக் கொண்டிருந்தது.

  1. அதிகளவு வெப்பம் உற்பத்தியாகின்றது.
  2. மெதுவாக தொழிற்படுகின்றது.
  3. அளவில் பெரியது.
  4. அங்கும் இங்கும் கொண்டு செல்ல முடியாது.
  5. அதிக அளவு மின் நுகரப்பட்டது.
  6. விலை அதிகம்.

உதாரணங்கள் - ENIAC, EDVAC, EDSAC, UNIVAC, IBM 701, IBM 650

இரண்டாம் தலைமுறை (2nd Generation)

இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களுக்குப் பதிலாக திரான்சிஸ்டர்கள் (Transistors) பயன்படுத்தப்பட்டது. துணைத் (Secondary Storage Device) தேக்கங்களாக நாடா (Tape), நெகிழ்வட்டு (Floppy Disk) என்பன பயன்படுத்தப்பட்டன. இத்தலைமுறைக் கணினிகளில் ஒருங்கு சேர்ப்பு மொழி (Assembly Language) மற்றும் உயர்நிலை செய்நிரலாக்க மொழி (High Level Programming Language) என்பன பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் தலைமுறை கணினிகளை முதலாம் தலைமுறைக் கணினிகளுடன் ஒப்பிடும் போது பின்வரும் இயல்புகளைக் கொண்டிருந்தது.

  1. அளவில் சிறியது.
  2. குறைந்தளவு வெப்பத்தை வெளியிடுகின்றது.
  3. குறைந்த அளவு மின் நுகரப்பட்டது.
  4. விலை அதிகம்.

உதாரணங்கள் IBM 1620, IBM 7094, CDC 1604, CDC 3600, UNIVAC 1108.

மூன்றாம் தலைமுறை (3rd Generation)

மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் திரான்சிஸ்டர்கள் (Transistors) க்குப் பதிலாக ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC - Integrated Circuits) பயன்படுத்தப்பட்டன. முதற் தடவையாக கணினிகளில் தரவு உள்ளீட்டுக்காக சாவிப்பலகை (Keyboard) மற்றும் சுட்டி (Mouse) என்பன இத் தலைமுறையிலேயே பயன்படுத்தப்பட்டது. கணினி பணிச் செயல்முறை மற்றும் உயர்நிலைக் (High Level) கணினி மொழிகள் என்பன இத்தலை முறையிலேயே பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் தலைமுறைக் கணினிகளானது பின்வரும் இயல்புகளை கொண்டிருந்தது.

  1. அளவில் சிறியது.
  2. குறைந்தளவு வெப்பத்தை வெளியிடுகின்றது.
  3. விரைவானது.
  4. குறைந்த அளவு மின் நுகரப்படுகிறது.
  5. விலை அதிகம்.

உதாரணங்கள் IBM 370, PDP-11, IBM System/360, UNIVAC 1108, Honeywell-6000, DEC series, and ICL 2900, TDC - 316

நான்காம் தலைமுறை (4th Generation)

இத் தலைமுறையில் பேரளவு ஒருங்கிணைந்த சுற்றுகளும் (LSIC - Lange Scale Integrated Circuits) மிகப் பேரளவு ஒருங்கிணைந்த (VLSI - Very Large Scale Integrated Circuits) சுற்றுகளும், நுண்முறைவழியாக்கிகளும் (Microprocessor) பயன்படுத்தப்பட்டது. கையகக் கணினிகள், உயர் கொள்திறன் உள்ள வன் வட்டுகள் (Internal Hard Disk), தனியாள் கணினிகள் (Personal Computer), மற்றும் விரைவான கணினி வலையமைப்புகள் (High Speed Internet Connection) என்பன முக்கியமானவையாகும். இத் தலைமுறையிலேயே வரைவியல் பயனர் இடைமுகம் (GUI - Graphical User Interface) கொண்ட பணிச் செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் UNIX பணிச் செயல்முறையும் பயன்படுத்தப்பட்டது. நான்காம் தலைமுறைக் கணினிகளின் இயல்புகளாக.

  1. மிகச் சிறியது.
  2. அங்கும் இங்கும் கொண்டு செல்லத்தக்கது.
  3. இற்றைப்படுல் எளிதாகும்.

உதாரணங்கள் IBM 4341, DEC 10, STAR 1000 and PUP 11.

ஐந்தாம் தலைமுறை (5th Generation)

ஐந்தாம் தலைமுறைக் கணினிகளில் மிகப்பெரிய சுற்றுகள் (ULS - Ultra Large Scale) பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அதிஉயர் கொள்திறன் கொண்ட வன்வட்டு, கொண்டு செல்லத்தக்க ஒளியியல் நெகிழ்வட்டுகளும் (Optical Device) பயன்படுத்தப்பட்டதுடன் இணையம் (Internet) இத்தலைமுறையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்தாம் தலைமுறை கணினிகளின் இயல்புகளாக.

  1. அங்கும் இங்கும் கொண்டு செல்லலாம்.
  2. செலவு குறைந்தது.
  3. அளவில் சிறியது.
  4. நம்பகத்தன்மையும் திறனும் கூடியது.

உதாரணங்கள் Param 1000, Intel P4, IBM laptops, notebooks, and PCs of Pentium, UltraBook

கணினிகளை வகைப்படுத்தல்

கணினிகளை அவற்றின் தொழினுட்பத்தின் அடிப்படையிலும், நோக்கத்தின் அடிப்படையிலும், பருமனின் அடிப்படையிலும் வகைப்படுத்த முடியும் அவையாவன.

தொழினுட்பத்தின் அடிப்படையில் வகைப்படுத்தல்.

ஒத்திசைக் கணினி (Analog Computer)

ஒத்திசை கணினி என்பது மின்சாரம், இயந்திரம் அல்லது Hydraulic அளவுகள் என்பவற்றின் தொடர்ச்சியான மதிப்புகளைக் கையாளும் கணினிகளாகும். இவ்வாறான கணினிகள் சுற்றாடலில் உள்ள மாற்றங்கள் (கதி, வோல்ற்றளவு, அமுக்கம், வெப்பநிலை) போன்ற ஒத்திசைச் சைகைகளை (Analog Signal) இனங்கண்டு அதற்கேற்ப தொழிற்படுகின்றது. உதாரணங்கள் கதிமானி, உணரிகள் உள்ள வீதி விளக்குகள் வானிலை அளவைப் பொறி.

இலக்கமுறைக் கணினி (Digital Computer)

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற துவித எண்களை (Binary Number) அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய கணினிகள் இலக்கமுறைக் கணினிகள் எனப்படும். இவைகள் இலக்கமுறை சைகைகளை (Digital Signal) கொண்டு இயங்குவதுடன் செய்நிரலிற்கேட்ப மின் வலுவினால் தொழிற்படுத்தப்படுகின்றன.

கலப்பினக் கணினி (Hybrid Computer)

ஒத்திசை கணினிகள் (Analog Computer), இலக்கமுறை கணினிகள் (Digital Computer) ஆகிய இரு வகைகளினதும் ஒரு கலப்பாக கலப்பினக் கணினிகளை அறிமுகம் செய்யலாம். இது ஒத்திசை சைகைகள் (Analog Signal) மற்றும் இலக்கமுறை சைகைகள் (Digital Signal) என்பவற்றினைக் கொண்டு இயங்கக் கூடியதாகக் காணப்படும். உதாரணங்கள் ECG பொறி, ATM இயந்திரம்.

நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தல்

விசேட தேவைக் கணினி (Special Purpose Computer)

விசேட தேவைக் கணினிகலானது விசேட தேவைகளுக்காக அல்லது ஒரு குறிப்பிட்ட விஷேட பணியை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிகளாகும். உதாரணங்கள் Personal Digital Assistants (PDAs), mobile phones, palm-top computers, pocket PCs

பொதுநோக்குக் கணினி (General Purpose Computer)

பொதுநோக்குக் கணினிகள் எனப்படுவது பல்வேறு பணிகளைச் செய்வதற்காக பயன்படுத்தக் கூடியவாறு வடிவமைக்கப்பட்ட கணினிகளைக் குறிக்கின்றது. உதாரணங்கள் Desktops, Notebooks, Smartphones and Tablet

பருமனை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தல்.

மீக்கணினி (Supercomputer)

இது மிகவும் வேகமானதும் மற்றும் சக்தி வாய்ந்ததுமான கனியாகும். மிகவும் விலை உயர்ந்த இக் கணினிகள் பாரிய அளவில் கணித்தல்களை மேற்கொள்வதற்குத் தேவையான சிறப்புப் பிரயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணங்கள் TIANHE-1, IBM Sierra, Sunway TaihuLight, NUDT Tianhe-2, Cray Titan.

தலைமைக் கணினி (Mainframe Computer)

அளவில் பெரியதும், விலை உயர்ந்ததுமான இக் கணினியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பயனர்கள் பயனாற்றும் செயலாற்றலை கொண்டது. இவ்வாறான கணினிகள் பெரிய வியாபாரங்கள் மற்றும் மின்-வணிகம் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரிய வர்த்தக நிறுவனங்களாலும் இப்போது பயன்படுத்தப்படுகின்றது. உதாரணங்கள் IBM z15, IBM z14 System z10 servers, HP mainframe ,IBM 370, S/390

சிறு கணினிகள் (Mini Computers)

நடுத்தர அளவிலான இக் கணினிகள் சிறிய அல்லது நடுத்தர சேவைகளைப் பயன்படுத்தும் வணிகம் மற்றும் விஞ்ஞான பிரயோகங்கள் என்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இக் கணினிகள் பொதுநோக்கக் (General Purpose) கணினிகள் எனவும் அழைக்கப்படும். உதாரணங்கள் IBM's AS/400e, Honeywell 200, TI-990

நுண் கணினிகள் (Micro Computer)

01. மேசைக் கணினி (Desktop Computer) - மேசையில் பொருத்திப் பயன்படுத்தக்கூடிய தனிநபர் கணினிகள்.

02. மடிக்கணினி (Laptop Computer) - அங்கும் இங்கும் கொண்டு செல்லத்தக்க கணினிகள்.

03. குறிப்புப் புத்தகம் (Notebook) - அங்கும் இங்கும் கொண்டு செல்லக்கூடிய, மடிக் கணினிகளை விட மெல்லியதும் சிறியதுமான கணினிகள்.

04. வில்லைக்கணினி (Tablet Computer) - இது தொடுதிரை இடைமுகத்துடன் கூடிய, கொண்டு செல்லக்கூடிய வடமில்லா இணைப்புடைய தனிநபர் கணினியாகும். இது குறிப்புப் புத்தகக் கணினியை விட சிறியதானதும் சூட்டிகைத் தொலைபேசிகளை விட பெரியதாகவும் காணப்படும்.

05. பெப்லட் (Phablet) - இது சூட்டி கைத்தொலைபேசிகளை விட சற்றுப் பெரிதாகவும் வில்லைக்கணினிகளை விட சற்று சிறிதான அளவினைக் கொண்ட தொடுதிரை இடைமுகமானது ஐந்து அங்குலத்திலிருந்து அதிகரித்து காணப்படுகிறது. (Apple 6 Plus, Galaxy Note).

06. சூட்டி கைத் தொலைபேசி (Smart Phone) - இது இயக்கமுறைமை மற்றும் ஏனைய வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு செல்லிடத் தொலைபேசியாகும்.


Post a Comment

0 Comments