Testing

உள்ளடக்கம்

  1. தரவு முறைவழியாக்கல் படிமுறைகள்
    1. தரவு சேகரித்தல்.
    2. தரவு செல்லுபடியாகும் முறை
      1. தரவு வகை சரிபார்த்தல்.
      2. வரவு, வழு சரிபார்த்தல்.
      3. வீச்சினைச் சரிபார்த்தல்.
      4. மாதிரி சரிபார்த்தல்.
      5. தனித்துவச் சரிபார்ப்பு.
    3. தரவு முறைவழியாக்கல்.
    4. வெளியீட்டு முறைகள்.
    5. சேமிப்பு முறைகள்.
  2. தரவு உள்ளீடு செய்யும் விதங்கள்
    1. நேரடியான மற்றும் தொலைவிலான தரவு உள்ளீடு.
    2. தொடரறா நிலையும் தொடரறு நிலையும்.

நினைவகப் படிநிலை (Memory Hierarchy)

கணினி அமைப்பு வடிவமைப்பில் (Computer System Design) நினைவகப் படிநிலை என்பது (Memory Hierarchy) நினைவகத்தை ஒழுங்கமைப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இவ்வாறு ஒழுங்கமைப்பதன் மூலம் அணுகல் நேரம் (Access Time), செலவினம் (Cost) என்பவற்றை குறைக்கவும் மற்றும் விரைவான தொடர்பாடலை (Communication) மேற்கொள்ளவும் முடியும்.



கொள்ளளவு (Capacity)

இது நினைவகத்தில் சேமிக்கக்கூடிய தகவல்களின் அளவினைக் குறிக்கின்றது. மேலிருந்து கீழ் நோக்கி நகரும் போது அதன் கொள்ளளவு அதிகரிக்கிறது.

அணுகல் நேரம் (Access Time)

இது தரவுகளை எழுதுவதற்கும், வாசிப்பதற்குமான கோரிக்கைக்கும் மற்றும் தரவு கிடைப்பதற்கும் இடையேயான நேர இடைவெளியாகும். படிநிலையில் நாம் மேலிருந்து கீழ்நோக்கி நகரும்போது அணுகல் நேரம் அதிகரிக்கின்றது.

செயற்திறன் (Performance)

நினைவகப் படிநிலையில் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் போது செயற்திறன் அதிகரிக்கின்றது.

விலை (Cost)

படிநிலையில் நாம் கீழிருந்து மேலே செல்லும்போது ஒரு பிட்டுகான விலை அதிகரிக்கின்றது. அதாவது வெளிப்புற (External) நினைவகத்தை விட உள் (Internal) நினைவகம் விலை உயர்ந்தது.

நிலையற்ற அல்லது அழிதகு நினைவகம் (Volatile Memory)

கணினியின் நினைவகங்களான இச்சாதனங்களுக்கு மின் இணைப்பு இருக்கும் வரை மட்டும் அதில் காணப்படும் தரவுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கப்படும் போது தரவுகலானது முழுமையாக நினைவகத்திலிருந்து இழக்கப்படும் உதாரணமாக

  1. பதிவிகள் (Register Memory)
  2. பதுக்கு நினைவகம் (Cache Memory)
  3. தற்போக்குப் பெருவழி நினைவகம் (RAM)

பதிவு நினைவகம் (Register Memory)

பதிவு நினைவகம் மிகச் சிறியதும் வேகமானதுமான நினைவகமாகும். இது முறை வழியாக்கியின் உட்பகுதியில் காணப்படுவதோடு அடிக்கடி பயன்படுத்தப்படும் தரவுகளைக் கொண்டிருக்கும்.

பதுக்கு நினைவகம்

செயற்படு நிலையில் (Activate) காணப்படும் மென்பொருளினால் அடிக்கடி அணுகப்படுகின்ற தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களைச் சேமித்து வைப்பதற்கு இந்நினைவகம் பயன்படுத்தப்படுகிறது. இது மையமுறைவழி அலகு (CPU) மற்றும் தற்போக்குப் பெருவழி நினைவகம் (RAM) என்பவற்றிற்கு இடையில் காணப்படும்.



பதுக்கு நினைவக வகைகள்.

மட்டம் 1 (L1) - இது நுண்செயலியினுள் உட்பொதிந்து காணப்படுவதோடு மிகவும் வேகமானதும் ஒப்பீட்டளவில் சிறியதுமாகக் காணப்படும்.

மட்டம் 2 (L2) - இது அனேகமாக L1 யினை விட கொள்ளளவில் கூடியதாகவும் வேகம் குறைந்ததாகவும் காணப்படும். இது மையமுறைவழி அலகினுல் அல்லது மையமுறைவழி அலகிற்கு வெளியில் காணப்படும்.

மட்டம் 3 (L3) - இது சாதாரணமாக L1, L2 ஆகிய இருவகைப் பதுக்கு நினைவகங்களினதும் செயற்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுகின்றது. மேலும் L3 ஆனது L2 யினைக் காட்டிலும் குறைந்த வேகம் கொண்டதுடன் பிரதான நினைவகத்தினை (RAM) விட இரு மடங்கு வேகம் கூடியது.

தற்போக்குப் பெருவழி நினைவகம் (RAM)

கணினியின் பிரதான நினைவகமான இது மென்பொருளினைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தரவுகளையும் கணினி செயற்படுவதற்குத் தேவையான தரவுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

தற்போக்குப் பெருவழி நினைவகத்தின் (RAM) வகைகள்
  1. நிலையான தற்போக்குப் பெருவழி நினைவகம் (SRAM)
  2. மாறும் தற்போக்குப் பெருவழி நினைவகம் (DRAM)
  3. ஒத்திசைவு மாறும் தற்போக்குப் பெருவழி நினைவகம் (SDRAM)

நிலையான தற்போக்குப் பெருவழி நினைவகம் (SRAM - Static Random Access Memory)

SRAM இயங்குவதற்குத் தொடர்ச்சியான மின்வலு தேவைப்படுவதுடன் தொடர்ச்சியான புத்துயிர்ப்பு (Refresh) அடைவது அவசியமன்று. மின்சாரம் துண்டிக்கப்படும் போது மொத்த தரவுகளும் இதிலிருந்து நீக்கப்படும். மேலும் இவற்றின் அனுகூலங்களாக குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படுவதுடன் மிக வேகமாகவும் தொழிற்படக்கூடியதுமாகும். பிரதிகூலங்களாக குறைந்த கொள்திறன் (Capacity) மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகமாக காணப்படுவதுமாகும்.

SRAM பயன்படுத்தப்படும் இடங்கள்.

  1. CPU Register Memory.
  2. CPU Cache Memory.
  3. Hard Drive Buffer or Cache
  4. Digital to Analog Converter (DAC).

மாறும் தற்போக்குப் பெருவழி நினைவகம் (DRAM - Dynamic Random Access Memory)

DRAM ஆனது தரவுகளை வைத்திருப்பதற்குத் தொடர்ச்சியாக புத்துயிர்ப்பு (Refresh) அடைவது அவசியம். இங்கு கொள்ளளவியானது (Capacitor) தரவுகளைச் சேமிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் அனுகூலங்களாக குறைந்த உற்பத்திச் செலவு மற்றும் அதிகளவு நினைவகக் கொள்ளளவைக் கொண்டவையாகும். பிரதிகூலங்களாக மெதுவான அணுகல் கதி (Access Time) அதிக அளவு மின்னுகர்ச்சி என்பனவாகும்.

DRAM பயன்படுத்தப்படும் இடங்கள்

  1. System Memory.
  2. Video Graphics Memory.

குறிப்பு :- DRAM புத்துயிர்ப்பு நடைபெறாவிடின் தரவுகள் இழக்கப்படும். ஒத்திசைவு மாறும் தற்போக்குப் பெருவழி நினைவகம் (SDRAM - Synchronous Dynamic Random Access Memory). SDRAM ஆனது DRAM யின் ஒரு வகையாகக் காணப்படுகின்றது. அதாவது குறித்த ஒரு தரவினைக் கணினிக்கு வழங்கியதும் மையமுறைவழியாக்க அலகினால் கடிகாரத் துடிப்பு (Clock Signal) கிடைக்க பெறும் வரை காத்திருக்கும். ஆனால் DRAM ஆனது கடிகாரத் துடிப்புக்குக் காத்திருக்காது உடன் துளங்களைக் காட்டும்.

தரவு சேகரித்தல் (Data Gathering)

தரவு சேகரித்தல் முறைமையானது கைமுறைத் தரவு சேகரிப்பு (Manual), அரைத் தன்னியக்க முறைத் தரவு சேகரிப்பு (Semi Automated), தன்னியக்க முறைத் தரவு சேகரிப்பு (Automated) என வகைப்படுத்தப்படுகின்றது.

நேர்காணல் (Interview), வினாவுதல் (Questionnaire), அவதானித்தல் (Observation) என்பன கைமுறைத் தரவு சேகரித்தல் முறையாகும். நேர்காணல் (Interview) மூலமும் வினாவுதல் (Questionnaire) மூலமும் கிடைத்த விடைகள் தீர்மானம் எடுப்பதற்கு இலகுவாகக்' காணப்படுவதுடன் தகுதியான தரவினையும் பெறக்கூடியதாக உள்ளது. வினாவுதல் முறையானது மிக விரைவான முறையாகக் காணப்படுவதுடன் எண்ணிக்கை அடிப்படையிலான தரவுகளைச் சேகரிப்பதற்குப் பொருத்தமானதாகக் காணப்படுகிறது.

அரைத்தன்னியக்க முறைகளிலும் (Semi Automated), தன்னியக்க முறைகளிலும் (Automated) OMR, OCR, MICR, Card/Tape Readers, Magnetic Stripe Readers, Barcode Readers, Sensor என்பன பிரபல்யமாகக் காணப்படுகின்றன.

OMR (Optical Mark Recognition) ஒளியியல் குறி வாசிப்பான் ஆனது பென்சிலினால் அடையாளமிடப்பட்ட இடத்தினை இதற்கெனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வடிவத்திற்கு ஏற்றவாறு கோப்புகளில் இருந்து வருடும் (Scan). இது பல்தேர்வு வினாத்தாள்களில் புள்ளியிடலுக்குப் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான ஒரு முறையாகும்.

ஒளியியல் எழுத்துருவாசிப்பான் (OCR - Optical Character Reader) ஆனது அச்சிடப்பட்ட (Hard Copy) எழுத்துக்களை வருடுவதுடன்(Scan) எழுத்துக்களைப் பதிப்பிக்கக்கூடிய (Editing) வகையில் மாற்றவும் பயன்படுத்தப்படுகின்றது.

காந்தமை எழுத்துரு வாசிப்பான் (MICR - Magnetic Ink Character Reader) ஆனது காசோலைகளில் காணப்படும் காந்த மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களை உள்ளீட்டுத் தரவாகப் பயன்படுத்துகின்றது.

காந்தப்பட்டி வாசிப்பான் (Magnetic Reader) ஆனது கடன் அட்டைகளிலும் (Credit Card), வங்கி ATM அட்டைகளிலும் காணப்படும் தரவுகளை வாசிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

பட்டைக்குறிமுறை வாசிப்பான் (Barcode Reader) ஆனது பார்க்கக் கூடிய ஒளியினைப் பயன்படுத்தி பட்டைக் குறியினை (Barcode) வருடி வாசித்து அதில் காணப்படும் தரவுகளைக் கணினி முறைமைக்கு மேற்கோள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

உணரிகளானது (Sensor) வெவ்வேறு இடங்களில் காணப்படும் தரவுகளைத் தன்னியக்கமாகவும் விரைவாகவும் சேகரிப்பதற்கு உதவுகின்றன. உதாரணம் Position Sensors, Pressure Sensors, Temperature Sensors, Vibration Sensors, Humidity Sensors.

தரவு செல்லுபடியாகும் முறை (Data Validation Method)

தரவு வகை சரிபார்த்தல் (Data Type Check)

சரியான தரவு வகை (Numeric, Text, Date, Currency) முறைமைக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கும். உதாரணமாக

  1. ஒரு மாணவனின் பெயர் - Text
  2. மாணவனின் மொத்த புள்ளி - Numeric
  3. ஒரு நாட்டின் நாணய அலகு - Currency
  4. ஒருவரின் பிறந்த நாள் - Date

வரவு, வழு சரிபார்த்தல் (Presence Check or Error Check)

இது தரவு கிடைக்கப் பெறுதலைச் சரிபார்க்கின்றது. முக்கியமான தரவுகள் இதன் போது முறைமைக்கு உள்ளிடல் அவசியமாகும். உதாரணம் வெறுமையாகக் (Empty) காணப்படாமையை உறுதி செய்தல்.

வீச்சினைச் சரிபார்த்தல் (Range Check)

தரவானது குறித்த வீச்சினுல் காணப்படுவதினை உறுதி செய்தல். உதாரணம் புள்ளிகள் 0 இற்கும் 100 இற்கும் இடையில் இருப்பதை உறுதி செய்தல். இது பெரும்பாலும் எண்கள் (Number), திகதி (Date), நேரம் (Time), நாணயம் (Currency) என்பவற்றிற்கு மிகப் பொருத்தமானதாகும்.

மாதிரி சரிபார்த்தல் (Format Check)

கணினி முறைமைக்குத் தரவுகளை வழங்கும் போது குறித்த மாதிரியில் (Format) தரவுகள் வழங்கப்படுவதனை உறுதி செய்கின்றது. உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள் - Date (YYYY-MM-DD, DD-MM-YYYY, MM-DD,YYYY).

தனித்துவச் சரிபார்ப்பு (Uniqueness Check)

மின்னஞ்சல் முகவரிகள் (E-mail), தேசிய அடையாள அட்டை எண்கள் (NIC Number) போன்ற சில தரவுகள் இயல்பிலேயே தனித்துவமானதாகும். தனித்துவச் சரிபார்ப்பு மூலம் ஒரு தரவுத்தளத்தின் (Database) புலங்களில் (Field) தனிப்பட்ட உள்ளீடுகள் இருக்க வேண்டும். ஒரு தரவுத்தளத்தில் ஒரு உருப்படி பல முறை உள்ளிடப்படவில்லை என்பதை இது உறுதி செய்கின்றது.

தரவு முறைவழியாக்கல் (Data Processing)

தரவு உள்ளீடு மற்றும் தரவு முறைவழியாக்கல் என்பன ஒரு தொகுதியாகத் தொகுதிவாரி முறைவழியாகத்தில் மேற்கொள்ளப்படும். இது பாரிய எண்ணிக்கையிலான தரவுகளைக் கையாள்வதற்கு இலகுவானதாகும். ஆகவே தரவானது, முறைமை தொடரறா (Online) நிலைக்கு வரும் வரைக்கும் முறைவழிப்படுத்துவதற்காகச் சேமிக்கப்படும். தொகுதிவாரியிலான முறைவழியாக்கம் Billing System, Payroll என்பவற்றில் மேற்கொள்ளப்படுகின்றன. தொகுதிவாரியிலான முறைவழியாக்கம் (Batch Processing) முறைமையினால் மேற்கொள்ளப்படுகின்றன.

நிகழ் நேர முறைவழியாக்கத்தில், தரவின் முறைவழியாக்கமான உள்ளீடு, முறைவழியாக்கம், வெளியீடு மற்றும் சேமிப்பு என்பன ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணம் அணுமின் நிலையக் கட்டுப்பாடு விமான தன்னிச்சை விமானி (Auto Pilot) என்பவற்றில் காணப்படும் முறைவழியாக்கம் நிகழ்நேர முறைவழியாக்கமாகும்.

வெளியீட்டு முறைகள் (output)

நேரடி முன்வைப்பில் பயனர் தெரிவிப்பி (Display), பல்லூடக எரிவை (Multimedia Projector), அச்சுப்பொறி (Printer) என்பவற்றினைப் பயன்படுத்துகின்றனர். கணினித் திரை மற்றும் பல்லூடக எரிவை என்பன மென் பிரதிகளை (Soft Copy) வெளியிடுபவையாகவும் அச்சுப்பொறி வன் பிரதிகளை (Hard Copy) வெளியிடும் கருவிகளாகவும் காணப்படுகின்றன.

சேமிப்பு முறைகள் (date store)

தரவுகளை மேலதிக முறைவழியாக்கல் தேவைகளுக்காகவும், பாதுகாப்பாகவும் சேமிப்பதற்குச் சேமிப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண கணினிகளின் உள்ளே தரவுகளைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்களாக வன்வட்டு (Hard Disk), இருவட்டு (CD), DVD, காந்த நாடா (Magnetic Tape) போன்றவற்றினைப் பயன்படுத்தலாம். தொலைவான சேமிப்பகங்களான மேகச் சேமிப்பகங்கள் (Cloud Storage) தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தொலைவான தரவுகளைச் சேமிக்க இணையம் அவசியமாகும்.

தரவு உள்ளீடு செய்யும் விதங்கள்

கணினிக்கான தரவுகல் உள்ளீடு செய்யும் விதங்களுக்கேட்ப பிரதானமாக இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றது அவையாவன

நேரடியான மற்றும் தொலைவிலான தரவு உள்ளீடு (Direct and Remote)

நேரடித் தரவு உள்ளீட்டில் (Direct Data Input) தரவானது பயனர் தலையீடு இன்றி முறைமையில் நேரடியாக உள்ளீடு செய்யப்படுகின்றது. உதாரணமாக

  1. RFID - Radio-Frequency Identification
  2. OMR - Optical Mark Recognition
  3. OCR - Optical Character Recognition
  4. MICR - Magnetic Ink Character Recognition

தொலைவிலான தரவு உள்ளீட்டில் (Remote Data Input) முறைமையானது தரவுகளை சேமிக்க கூடியவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவு சேகரித்தலும் தரவு மாற்றிடும் வெவ்வேறு புவியியல் இடங்களில் காணப்படும்.

தொடரறா நிலையும் தொடரறு நிலையும் (Online and Offline)

Data Entry சேவையின் இரண்டு முக்கிய பிரிவுகள் தொடரறா நிலையும் மற்றும் தொடரறு நிலையும் ஆகும். இவற்றிற்கான பிரதான வேறுபாடு இணைய இணைப்பாகும். தொடரறா தரவு உள்ளீடு என்பது இணையத்தைப் பயன்படுத்தி தரவு உள்ளிடலைக் குறிக்கின்றது. மேலும் தரவு உள்ளிடப்படும் வேளையில் அதன் பரிமாற்றமும் நடைபெறுகின்றது. தொடரறு தரவு உள்ளீடு என்பது இணையப் பயன்பாடின்றி தரவு உள்ளிடலைக் குறிக்கின்றது. தொடரறு நிலையில் தரவானது வெவ்வேறு இடங்களில் நிகழ்வதுடன், இது குறித்த ஒரு நேரத்தில் ஒரு தொகுதியாகப் பரிமாற்றம் செய்யும்.


Post a Comment

0 Comments