Evolution of Operating System | இயக்க முறைமையின் பரிணாம வளர்ச்சி

உள்ளடக்கம்

  1. இயக்க முறைமையின் பரிணாம வளர்ச்சி
    1. முதலாம் தலைமுறை.
    2. இரண்டாம் தலைமுறை.
    3. மூன்றாம் தலைமுறை .
    4. நான்காம் தலைமுறை.

இயக்க முறைமையின் பரிணாம வளர்ச்சி

தற்காலத்தில் காணப்படுகின்ற இயக்க முறைகளின் உருவாக்கத்திற்கு முன்னர் இது பல்வேறு வடிவங்களையும் பல மாற்றங்களையும் சந்தித்ததன் பின்னரே தற்கால இயக்க முறைமைகள் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு இயக்க முறைமையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் இயக்க முறைமைகளின் பரிணாமம் என்று அழைக்கப்படுகின்றன. இயக்க முறைமையின் பரிணாமம் நான்கு தலை முறைகளைக் கொண்டது அவையாவன பின்வருமாறு:

முதலாம் தலைமுறை

இத்தலை முறையானது 1945 - 1955 வரையான காலப்பகுதியை குறிக்கின்றது. இங்கு இதற்கு முன்னர் காணப்பட்ட இயந்திர அமைப்புகள் (Mechanical Systems) பயன்படுத்தப்பட்டதோடு இயக்க முறைமையானது (Operating System) காணப்படாமையினால் அதன் பாகங்கள் (Parts) தொழிலாளர்களால் கைமுறையாக (Manual) கையாளப்பட்டன. அத்தோடு தொடர் முறைவழியாக்கம் (Serial Processing) அதாவது செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளக் கூடியதாக காணப்பட்டதோடு தனிப் பயனர் (Single User) முறைமையைக் கொண்டதாகவும் காணப்பட்டது. இங்கு கணினி செய் நிரலாளர்கள் (Computer Programmer) அல்லது பயன்படுத்துபவர்கள் (Users) நேரடியாகவே வன்பொருள்களுடன் தொடர்புபட்டு அறிவுறுத்தல்களை கணினிக்கு வழங்கக் கூடியதாக காணப்பட்டது.

இக்காலப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கணினியானது நேரடியாகவே அவற்றிற்கான செய்நிரல்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையை கொண்டிருந்ததோடு Display Light மற்றும் Toggle Switch மூலம் செயல்படும் தன்மையை கொண்டதாகவும் காணப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இயந்திரமொழிப் பயன்பாடு இக்கணினிகளில் காணப்பட்டதோடு பின்னர் துளை அட்டை வாசிப்பான் (Punch Card Reader) மூலம் கட்டளைகளை உள்வாங்க கூடியவாறான கணினிகளும் உருவாக்கப்பட்டன. அதேபோன்று வெளியீடானது அச்சுப்பொறி மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் காணப்பட்டது.

இங்கு கைமுறையிலான (Manual) மென்பொருள் திட்டமிடல், ஒற்றை நிரலாக்கம் (Uni Programming), மற்றும் குறித்த செய்நிரல் முறைவழியாக்கத்திற்காக கொண்டு செல்லப்படும் போதும் தேவையான உள்ளீடு மற்றும் வெளியீடுகளைச் செயற்படுத்தும் போதும் செயலியானது காத்திருக்கும்.

மனிதனின் திறன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் தவறிலைக்கக் கூடியவன் என்ற வகையிலும் இத்தலை முறையின் இறுதிக் காலப்பகுதியில் இயந்திர அமைப்புகளுக்குப் (Mechanical Systems) பதிலாக மின்னணு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்களிலும் பணிச்செயல் முறைமை பயன்படுத்தப்படவில்லை.

மின்னணு இயந்திரமானது அறிவுறுத்தல்களை வழங்கியவுடன் இயங்க ஆரம்பித்ததோடு பிழைகள் ஏதேனும் காணப்படுமாயின் குறித்த செயல் முறையானது மீண்டும் ஆரம்பத்திலிருந்து செயன்முறைக்குட்படுத்தப்பட்டது. இவ்வியந்திரங்களில் கணக்கீடு வேகம் குறைவாகக் காணப்பட்டதோடு இயந்திரத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலில் ஏதேனும் தவறுகள் காணப்படுமாயின் வெளியீட்டிலும் தவறுகள் காணப்பட்டன.


இரண்டாம் தலைமுறை

இத்தலை முறையானது 1955 - 1965 வரையான காலப்பகுதியை குறிக்கின்றது. இத்தலைமுறையில் எளிய தொகுதி இயக்க முறைமை (Simple Batch Operating System) பயன்படுத்தப்பட்டது. இங்கு இயந்திரத்தினால் ஆற்றப்பட வேண்டிய பணிகள் ஒரு தொகுப்பாக இயந்திரத்திற்கு வழங்கப்படுவதால் இவை தொகுதி இயக்க முறைமைகள் என்று அழைக்கப்பட்டன. ஒரு தொகுதி (Batch) என்பது ஒரே மாதிரியான பணிகள் அல்லது வேலைகளின் தொகுப்பைக் குறிக்கிறது.

முதலாம் தலைமுறையில் செயலியின் பயன்பாடு குறைவாகக் காணப்பட்டதால் செயலியின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்காக எளிய தொகுதி இயக்க முறைமை (Simple Batch Operating System) அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் குறைந்த செலவிலான இயந்திரத்துடன் செய்நிரல்கள் காந்த நாடவில் பதியப்பட்டு பணிசெயல் முறைமையினால் நாடாவிலிருந்து ஒரு நேரத்தில் ஒரு செய்நிரலை மட்டுமே முறைவழியாக்கத்திற்காகக் கொண்டுசெல்லப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. குறித்த செயன்முறையின் செயற்பாடு நிறைவடைந்த பின், இதனுடைய வெளியீடு பிறிதொரு காந்தநாடவில் சேமிக்கப்பட்ட பின்னர் அடுத்த செயன்முறை முறைவழியாக்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்.

இது ஒரே இயந்திரத்தில் பல பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தியதோடு அதற்கான அடித்தளமாகவும் அமைந்தது. இங்கு பயநர்கள் வன்பொருட்களுடன் நேரடி அணுகளைக் கொண்டிருக்கவில்லை அத்தோடு ஒற்றைச் செய்நிரலாக்கல் (Uni Programming), உயர் பதிலளிப்பு நேரம் (High Response Time), மற்றும் உள்ளீடு அல்லது வெளியீட்டின் போது செயலியானது செயலற்று இருக்கும்.



தொகுதி இயக்க முறைமையில் முதலில், பயனர் துளை அட்டைகளைப் (Punch Card) பயன்படுத்தி தனது வேலையைத் தயார் செய்கிறார். பின்னர் அவர் தயார் செய்த வேலையை கணினியை இயக்கக் கூடியவரிடம் (Computer Operator) சமர்ப்பிக்கிறார். பின்னர் Computer Operator வெவ்வேறு பயனர்களிடமிருந்து வேலைகளைச் சேகரித்து, ஒரே மாதிரியான பணிகளை ஒரு தொகுதியாக (Batch) வரிசைப்படுத்துகிறார். பின்னர், Computer Operator தொகுதிகளை ஒவ்வொன்றாக செயலிக்கு சமர்ப்பிக்கிறார். இங்கு ஒரு தொகுதியின் அனைத்து வேலைகளும் ஒன்றாகச் செய்யப்படுகின்றன.

இதன் அனுகூலங்கள்

ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கு மாறும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட செயல்முறைக்கும், முன்னர் வீணடிக்கப்பட்ட நேரத்தை இது சேமிக்கிறது. அத்துடன் இங்கு கைமுறையான தலையீடு அவசியமில்லை.

இதன் பிரதிகூலங்கள்

01. தொகுதி இயக்க முறைமையில், ஒரு தொகுப்பின் அனைத்து வேலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக செயல்படுத்தப்படுவதுடன் அனைத்து வேலைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னரே வெளியீடு பெறப்படுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட வேலையை அவசர அடிப்படையில் நிறைவேற்ற வேண்டியிருப்பின் முன்னுரிமை கொடுக்க முடியாது.

02. தொகுதி இயக்க முறைமையில், குறித்து ஒரு தொகுதிச் (Batch) செயல்கள் முடிவடைவதற்கு அதிகளவான நேரம் எடுக்கின்ற சந்தர்ப்பத்தில் ஏனைய தொகுதிச் செயல்கள் அதிகளவான நேரம் காத்திருக்க வேண்டிய தேவை உருவாகின்றது. இதனால் தொகுதி இயக்க முறைமை பட்டினிக்கு (Starvation) வழி வகுக்கின்றது.

03. தொகுதி இயக்க முறைமையில், ஒரு தொகுதியின் வேலைகளுக்கு சில I/O செயல்பாடு தேவைப்பட்டால், I/O செயல்பாடு முடியும் வரை CPU காத்திருக்க வேண்டும். I/O சாதனங்கள் மிகவும் மெதுவாக இருப்பதால், CPU நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருக்கும். இச் சந்தர்ப்பத்தில் CPU வேறு எந்த வேலையையும் எடுத்து அதை செயல்படுத்த முடியாது.

மூன்றாம் தலைமுறை

பல்நிரல்படுத்தல் தொகுதி முறைமை (Multi-Programmed Batch System)

நான்காம் தலைமுறை

நேரப்பகிர்வு முறைமை (Time Sharing System)

Post a Comment

0 Comments